Tamil Audio Books

3. கிரகணம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

Informações:

Synopsis

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார். நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் 'பார்க்' புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந்தார்கள். நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த்தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்தை நான் மறக்க முயன்று வருகிறேன். பஸ்மினாவை அப்பா முதன்முதலாக எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தது ஞாபகம் வந்தது. அப்போது பஸ்மினாவுக்கு எட்டுவயது இருக்கும்; என்னிலும் ஒரு வயது குறைவு. எலும்பும் தோலுமாகத்தான் இருந்தாள். கண்கள் மாத்திரம் பச்சை நிறத்தில் பெரிதாக இருந்தன. அவள் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வந்தது. தலை மயிர் சடைபிடித்துப் போ