Tamil Audio Books

2. ஒரு சாதம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

Informações:

Synopsis

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் 'ஒரு சாதம்' என்று போட்டிருந்தது. ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான். வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் 'ஸ்ரிப் ரீஸ்' போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஓவர் கோர்ட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது. Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil storie