Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி : வட்டி விகிதம் உயர்ந்தது: காரணங்களும், தாக்கங்களும்

Informações:

Synopsis

இருபத்தாறு மாத கால இடைவெளிக்குப் பின்னர், Reserve Bank of Australia அல்லது RBA எனப்படும் நாட்டின் மத்திய வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தி, அரசின் செலவினமா அல்லது தனியார் தேவையா தொடர்ச்சியான பணவீக்கத்தைத் தூண்டுகிறது என்பது குறித்து கடுமையான அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. நிதிநிலையைப் பாதுகாத்து, வெளிப்புற அழுத்தங்களைக் கருவூலக்காப்பாளார் சுட்டிக்காட்டும் அதே வேளையில், அரசின் தற்போதைய கொள்கை அமைப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தண்டிப்பதாகவும், மாற்றுப் பொருளாதார கொள்கைகளை அரசு புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் வாதிடுகின்றனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை, NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்களின் கருத்துகளுடன் எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.