Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 202:08:19
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • சிட்னி, பெர்த் பகுதிகளில் தட்டம்மை(Measles) தொற்று எச்சரிக்கை!

    17/02/2026 Duration: 03min

    சிட்னி மற்றும் பெர்த் பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்று பரவல் அதிகரிப்பு என சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 17 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை

    17/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • Anzac Day தினம் : NSW மக்களுக்கு கூடுதல் விடுமுறை!

    16/02/2026 Duration: 03min

    2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் ஆன்சாக் தினம் (ஏப்ரல் 25) வார இறுதியில் வரும் நிலையில், அதற்கான மாற்றாக கூடுதல் ஒரு பொது விடுமுறை வழங்கப்படும் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: காவல்துறை அதிகாரி கிருத்தன் விகாஷ் குட்டிக்கு சிறை!

    16/02/2026 Duration: 10min

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Oaklands காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கிருத்தன் விமல் விகாஷ் குட்டி பல்வேறு குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையின் பின்னர் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • வலியின்றி வாழ வழிவகுக்க ஒரு பரதநாட்டிய நிகழ்வு - 'வழி(லி)'

    16/02/2026 Duration: 10min

    பன்முக கலாசார சமூகங்களில் Palliative care இறுதிக்கால பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இயங்கி வரும் ‘பாலம்’ தொண்டு நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டில் Palliative care ward ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நிகழ்வாக வழி(லி) என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த தகல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் ‘பாலம்’ நிறுவனத்தின் Dr பிரணவன் கணேசலிங்கம் மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தரும் பரதநாட்டிய கலைஞர் பவஜன் குமார் அவர்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 16 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை

    16/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • நீங்கள் Social Mediaவில் எதை பார்க்கவேண்டும் என்று முடிவு செய்வது யார்? எது?

    15/02/2026 Duration: 10min

    Social Media Algorithm எனும் தொழில் நுட்பத்தை அரசு முறைப்படுத்தவேண்டும் என்று சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் தர ஆரம்பித்துள்ளனர். இந்த பின்னணியில் Social Media Algorithm குறித்து ஏன் மக்கள் அதிகம் புரிந்துகொள்ளவேண்டும் என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (8 – 14 பெப்ரவரி 2026)

    14/02/2026 Duration: 08min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (8 – 14 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • மிளகின் மருத்துவ குணங்கள்

    13/02/2026 Duration: 09min

    மிளகு, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். மிளகின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை உபயோகமாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • 13 கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் யோகம் - $80 மில்லியன் லாட்டரி பரிசு!

    13/02/2026 Duration: 02min

    விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒருவர் கடந்த வியாழக்கிழமை நடந்த Powerball லாட்டரி divison ஒன்றில் முழு $80 மில்லியன் ஜாக்பாட்டையும் வென்றுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • NSW Driver Licenceஇல் உங்கள் demerit pointகளை குறைக்கும் வழி தெரியுமா?

    13/02/2026 Duration: 02min

    NSW Driver Licenceஇல் உள்ள Demerit புள்ளிகளை குறைக்க உதவும் வகையில் தற்காலிகமாக நடைமுறையில் உள்ள Demerit Point Reward திட்டத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • தங்கத்தின் விலை சரிந்தது ஏன்? விலை மீண்டும் உயருமா?

    13/02/2026 Duration: 15min

    கடந்த ஆண்டு அதிகமான ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வீழ்ச்சியை கண்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்தி. தங்கத்தின் விலையில் ஏன் இந்த ஏற்றம் மற்றும் இறக்கம் மேலும் தங்கத்தின் விலை மீண்டும் உயருமா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதில் தருகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: லிபரல் கட்சி புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்தது ஏன்?

    13/02/2026 Duration: 09min

    ஆஸ்திரேலிய லிபரல் கட்சி புதிய தலைவராக Angus Taylor அவர்களையும் துணைத் தலைவராக Jane Hume அவர்களையும் இன்று காலை தெரிவு செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 13 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை

    13/02/2026 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு Superannuation உயரப்போகிறது! நீங்கள் அதில் ஒருவரா?

    12/02/2026 Duration: 03min

    Superannuationஇல் அதிக சேமிப்பு இருப்பு வைத்திருப்பவர்களுக்கு அதிக வரி, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அதிக Superannuation என்று சில சீர்திருத்தங்களை கொண்டுவர அரசு முனைந்து வருகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • Public transport in Australia: breaking down the basics - ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்து பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்

    12/02/2026 Duration: 11min

    Like in most countries, public transport in Australia is the cheapest way to get around. It includes trams, buses, trains and ferry services. And each state or territory has its own transport network. However, navigating Australia’s public transport system with ease requires knowing the basics around how it works and what to expect. - ஆஸ்திரேலியாவின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? அதில் பயணிக்கும் பயணிகள் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள் போன்று விடயங்கள் குறித்து ஆங்கிலத்தில் Zoe Thomaidou எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

  • உலக வானொலி தினம்: வானொலியும் செயற்கை நுண்ணறிவும்

    12/02/2026 Duration: 14min

    உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருட உலக வானொலி தினத்தின் கருப்பொருள், 'வானொலி மற்றும் செயற்கை நுண்ணறிவு'. செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம், அதன் உருவாக்கம் மற்றும் ஆய்வுக்கான ஒரு புதிய பாதையைத் திறக்கும் நோக்குடன் இந்தக் கருப் பொருள் வழங்கப்பட்டுள்ளது. “வானொலி மற்றும் அமைதி” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு 2023ஆம் ஆண்டு வானொலி தினம் கொண்டாடப்பட்ட போது, வானொலி ஒலிபரப்பில் சில சுவையான செய்திகளுடன், உலக வானொலி தினம் குறித்து நாம் ஒரு நிகழ்ச்சி படைத்திருந்தோம். அதன் மறு ஒலிபரப்பு இது. நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் மது மீதான வரி ஏன் உயர்ந்தது? யாருக்கு பாதிப்பு?

    12/02/2026 Duration: 07min

    ஆஸ்திரேலியாவில் கடந்த திங்கள் (2 Feb) முதல் மது மீதான அரசின் வரி உயர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • இன்றைய செய்திகள்: 12 பெப்ரவரி 2026 வியாழக்கிழமை

    12/02/2026 Duration: 06min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/02/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • எதிர்கால ஆபத்தான நோய்களை குழந்தை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கும் சோதனை ஆஸ்திரேலியாவில் பரவலாக்கப்படுகிறது!

    11/02/2026 Duration: 12min

    ஒரு குழந்தை பிறந்த உடனேயே செய்யக்கூடிய DNA mapping என்ற பரிசோதனையை கட்டாயமாக்குவதன் மூலமாக அந்தக்குழந்தைக்கு வாழ்நாளில் ஏற்படக்கூடிய ஆபத்தான நோய்களை உடனடியாகவே அறிந்து கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஊடகங்கள் முன்வைக்கும் தகவல்களை தொகுத்து முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

page 1 from 80