Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 202:08:19
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இன்றைய செய்திகள்: 26 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை

    26/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • விளையாட்டு 2025 - ஒரு மீள்பார்வை

    25/12/2025 Duration: 08min

    2025ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2025.

  • இலங்கை 2025: ஒரு மீள்பார்வை

    25/12/2025 Duration: 14min

    2025ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • உலகம் - 2025

    25/12/2025 Duration: 08min

    2025ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தாண்டு உலகளவில் தாக்கத்தையும் கவனத்தையும் பெற்ற முக்கிய உலக நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ‘சமூக நீதி, ஏழைகளுக்காக குரல் கொடுத்தல், தரமான எழுத்துக்களை மக்களுக்குத் தருதல் என்று என் பயணம் தொடரும்’

    25/12/2025 Duration: 12min

    கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2

  • ‘எனது 25 ஆண்டு குருத்துபணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா

    25/12/2025 Duration: 12min

    கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1

  • செய்தியின் பின்னணி: சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான படகோட்டப் போட்டி வரலாறு

    24/12/2025 Duration: 08min

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி பொதுவாக “Boxing Day” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடல் தொடர்பிலான விளையாட்டை நேசிக்கும் மக்களுக்கு, அந்த நாள் Sydney to Hobart Yacht Race என அழைக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை?

    24/12/2025 Duration: 07min

    உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், டென்மார்க் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரத்திலும் டென்மார்க் No 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை முன்வைக்கும் நிகழ்ச்சியை SBS-Newsக்காக ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தோடு SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.

  • கிறிஸ்துமஸ் சிறப்பு நாடகம்!

    24/12/2025 Duration: 07min

    Grace of Christmas எனும் தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு கனடா நாட்டில் மேடையில் அரங்கேறிய நாடகத்தை SBS தமிழ் ஒலிபரப்புக்காக தயாரித்து முன்வைக்கிறார் றைசெல். இந்த நாடகத்தில் நடித்தவர்கள்: Joseph Benher Dhason & Mary Sharmila Joseph Benher ஆகியோர். எழுத்தும், இயக்கமும்: Mathew Albert அவர்கள்.

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    24/12/2025 Duration: 03min

    கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியா 2025: ஒரு மீள்பார்வை

    24/12/2025 Duration: 12min

    கடந்து செல்லும் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.

  • இலங்கை: மீண்டும் தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக போராட்டம்

    24/12/2025 Duration: 08min

    யாழ். தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • All you need to know about Boxing Day in Australia  - Boxing Day பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    24/12/2025 Duration: 08min

    Australian Boxing Day is a unique blend of cultural and commercial significance. While it doesn't have a solid religious connotation here, it's a day when Australians extend their Christmas festivities. It's often a time for family barbecues, cricket matches, and watching the iconic Sydney to Hobart yacht race. On the other hand, many Australians look forward to this day to sweep the stores for the best bargains.  - ஆஸ்திரேலியாவில் Boxing Day என்பது கலாச்சார மற்றும் வணிக முக்கியத்துவத்தின் தனித்துவமான கலவையாகும். இத்தினம் தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 24 டிசம்பர் 2025 புதன்கிழமை

    24/12/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • செய்தியின் பின்னணி: Christmas Shopping- ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் கொடுத்தால் போதும்’ - நமக்கு உதவுமா?

    24/12/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் மத்தியில் மிகப்பிரபலமான ஒன்று 'Buy now, pay later' திட்டம். இதன்கீழ் பொருட்களை வாங்கும் ஒருவர் முழுத்தொகையையும் உடனே செலுத்தாமல் தவணைமுறையில் அதனைச் செலுத்த முடியும். இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மதுபோதையில் வாகனம் ஓட்டிய கணவன்: மன்னிப்புக்கோரிய விக்டோரியா Premier

    23/12/2025 Duration: 02min

    தனது கணவன் மதுபோதையுடன் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்து விக்டோரியா Premier Jacinta Allan மன்னிப்புகோரியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அடிலெய்டில் இந்தியப் பெண் கொலை, கணவன் கைது

    23/12/2025 Duration: 02min

    அடிலெய்டில் இந்தியப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 23 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    23/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • அரிதான வெள்ளைக் கங்காரு விற்பனைக்கு!

    22/12/2025 Duration: 02min

    தெற்கு ஆஸ்திரேலியாவில் அரிய வகை சாம்பல் மற்றும் வெள்ளை நிற கங்காருக்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உங்கள் Superannuation நிதியின் பயனாளியை நியமிப்பது ஏன் முக்கியம்?

    22/12/2025 Duration: 10min

    Superannuation Nomination என்பது, நீங்கள் இறந்தால் உங்கள் ஓய்வூதிய நிதியை யார் பெற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கும் செயல்முறையாகும். இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

page 11 from 80