Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
மெல்பனில் பரவிய லீஜினேயரிஸ் நோய் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
09/08/2024 Duration: 09minமெல்பனில் லீஜினேயரிஸ் நோயின் பரவல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் அதற்குக் காரணமாகக் கருதப்படும் ஒரு குளிரூட்டும் கோபுரம் தற்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீஜினேயரிஸ் நோய்ப் பரவல் பற்றிய பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மனிதம்: அப்டீன்னா என்ன?
08/08/2024 Duration: 08minதமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மனிதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
-
Tamil poet honoured with Singapore’s highest cultural award - சிங்கப்பூரின் அதியுயர் இலக்கிய விருது பெற்ற தமிழர்
08/08/2024 Duration: 25minSingaporean poet and writer K.T.M. Iqbal was awarded the country’s highest cultural award Cultural Medallion, by President Tony Tan Keng Yam last week. The Tamil poet of Indian-origin who has written over 200 poems for children, and much more on love, life, and nature. - சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள்.
-
நீங்கள் இறந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
08/08/2024 Duration: 08minநம் வாழ்வில் மிகவும் உறுதியாக நடக்கும் ஒரு விடயம் என்றால் மரணம்தான். இளையோர் முதியோர் ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் அனைவரும் இறுதியில் சந்திப்பது மரணத்தைத்தான்.
-
சட்டத்தின் கைகளில் Google ஆதிக்கம் ஆட்டம் காண்கிறதா?
08/08/2024 Duration: 10minஅதன் ஆதிக்கத்தைப் பயன் படுத்தி, கூகுளின் தேடு பொறி (Google Search Engine) அதற்குப் போட்டியாக இருக்கும் செயலிகளையும் மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதையும் தடுக்க சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
-
UKஐ உலுக்கிய வன்முறை கலவரம்: ஆஸ்திரேலிய பயணிகளுக்கு எச்சரிக்கை
07/08/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/08/2024) செய்தி.
-
தமிழக பேசுபொருள்: உள் இட ஒதுக்கீடு & சாதி கணக்கெடுப்பு
07/08/2024 Duration: 09minதமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீடு சாத்தியமாவது குறித்தும், சாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்ற கோரிக்கை வலுப்பெறுவது குறித்தும் செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக தகவல்களை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இசையை ஒரு பாடமாகக் கற்பது மற்றைய பாடங்களில் கவனம் செலுத்த உதவுமா?
07/08/2024 Duration: 10minNSW மாநில பாடசாலைகளில் கலை மற்றும் இசை ஒரு பாடமாகப் போதிக்கப்படுவது குறித்தும் அதற்கான பயிற்சி பற்றியும் மாநில நாடாளுமன்ற விசாரணை நடந்து வருகிறது.
-
பங்களாதேஷ் பிரதமர் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற பின்னணியும், அரசியல் நகர்வுகளும்!
06/08/2024 Duration: 13minபங்களாதேஷ் நாடு தற்போது சந்திக்கும் அரசியல் நெருக்கடி குறித்தும், பிரதமர் ஷேக் ஹசினா ஏன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்ற அரசியல் பின்னணி குறித்தும், எதிர்கால அரசியல் குறித்தும் அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
விக்டோரியாவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
06/08/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
A Mother's Heartfelt Plea: “Please bring my son home” - ஒரு தாயின் உருக்கமான வேண்டுகோள்: “எனது மகனைக் கண்டிபிடித்துத் தாருங்கள்”
06/08/2024 Duration: 06minKrishank Karthik (Krish for short) a 11th grade student at Suzanne Cory High School, Werribee, Victoria, has not returned home since yesterday, and his mother Shobana Karthik is making a fervent plea for his return. - மெல்பன் நகரின் புறநகர் Werribeeயிலுள்ள Suzanne Cory High School என்ற அரச பாடசாலையில் 11ஆம் வகுப்பு மாணவன் க்ருஷாங்க் கார்த்திக் (Krishank Karthik, சுருக்கமாக Krish) நேற்றிலிருந்து வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் அவரது தாயார் ஷோபனா கார்த்திக் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
உடல் எடையை குறைக்க புதிய மருந்து - Wegovy தற்போது மருந்தகங்களில் கிடைக்கிறது!
06/08/2024 Duration: 02minநீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் Ozempic மருந்து போன்று உடல் எடையை குறைக்கும் மருந்து தற்போது மருந்தகங்களில் கிடைக்கிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
அமெரிக்காவிற்கு அடிக்கடி செல்லும் ஆஸ்திரேலியர்களின் பயணம் எளிதாகிறது!
06/08/2024 Duration: 02minஅமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வரும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய மாற்றம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு அதிகரிப்பு
05/08/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் மட்டுமே!
05/08/2024 Duration: 01minகுயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் பரிசாட்திய திட்டம் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
ரிசர்வ் வங்கி வட்டிவீத உயர்வை நிறுத்தி வைக்குமா? நாளை தெரியும் விடை!
05/08/2024 Duration: 01minஇன்று தொடங்கும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் (RBA) கூட்டத்தில் வட்ட வீதம் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை நாட்டில் வீட்டு கடன் வைத்திருக்கும் கோடிக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
These simple tips can help you with good Dental Care - பல் பராமரிப்பிற்கு உதவும் எளிய குறிப்புகள்
05/08/2024 Duration: 12minThis Dental Health Week (5-11th August), the Australian Dental Association is urging people to prioritise their gum health by booking in with their dentist and checking their gum disease factsheet. To keep gum disease, tooth decay and serious whole-of-body health conditions away, learn more oral health tips at teeth.org.au. - பல் சுகாதார வாரம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பல் மருத்துவரிடம் முன் பதிவு செய்து, ஈறு நோய் பற்றி அறிந்து கொள்ளுமாறும், ஈறு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஆஸ்திரேலிய பல் மருத்துவ சங்கம் மக்களை வலியுறுத்துகிறது. ஈறு நோய், பல் சிதைவு மற்றும் தீவிர உடல் ஆரோக்கிய நிலைகளை விலக்கி வைக்க, இன்னும் கூடுதலான வாய்வழி சுகாதார உதவிக் குறிப்புகளை teeth.org.au என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
-
ஒலிம்பிக் 2024 : துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவிற்குப் பதக்கம்
05/08/2024 Duration: 09minஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாரிஸ் நகர குடியிருப்பாளரும் ஆர்வலருமான சிவகுமார் பொன்னுத்துரை இந்தப் போட்டிகள் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.
-
கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
05/08/2024 Duration: 08minகேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 340-கும் மேற்பட்டோர் பலி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்;
-
“Closing the Gap” செயல் திட்டத்தின் நிலைக்கு இரு பெரும் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்
05/08/2024 Duration: 09minClosing the Gap என்று பெயரிடப்பட்ட செயல் திட்டம், அதன் இலக்குகளை நோக்கி அரசின் செயல் திட்டங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளன என்று, Productivity Commission அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.