Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
அடிலெய்டில் ஒரே மாதத்தில் மொபைல் பாவித்த 31,000 வாகனம் ஓட்டுநர்களை படம் பிடித்த கமரா!
30/07/2024 Duration: 02minதெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் நிறுவப்பட்ட மொபைல் பாவனையை கண்டறியும் புதிய கமராக்கள், நிறுவப்பட்ட ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 31,000 வாகன ஓட்டிகள் தொலைபேசியைப் பயன்படுத்துவதைப் படம் பிடித்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
இத்தாலியை சுற்றி பார்க்கும் போது கையில் பாஸ்போர்ட் இல்லையெனில் $3000 அபராதம்!
30/07/2024 Duration: 02minஇத்தாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லும்போது எல்லாம் எப்போதும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவில்லை என்றால் சுமார் 3000 டாலர்கள் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய இந்திய ஜப்பானிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
30/07/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஒலிம்பிக் 2024 : முதல் நாளே பதக்கம் வென்றது ஆஸ்திரேலியா
29/07/2024 Duration: 10minஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் ஆரவாரத்துடன் தொடங்கியது. பாரிஸ் நகர குடியிருப்பாளரும் ஆர்வலருமான சிவகுமார் பொன்னுத்துரை இந்த நிகழ்வைப் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.
-
கொன்று அழிப்போம் எனப்பட்ட ஆடுகள் மில்லியன்கள் சம்பாதிப்பது எப்படி?
29/07/2024 Duration: 09minஆஸ்திரேலியாவில் feral goats என்ற காட்டு ஆடுகளைக் கொன்று அழித்த நிலை மாறி, அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதன் மூலம் மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காட்டாடுகள் எப்படி பிடிக்கப்படுகின்றன? எப்படி ஏற்றுமதி செய்யப்படுகின்றன? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
29/07/2024 Duration: 08minகடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.
-
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா?
29/07/2024 Duration: 02minசமீபத்திய Henley Passport குறியீட்டின்படி, ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு பயணிக்கும் போது வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
மருத்துவ பொருளின் தட்டுப்பாடு ஆஸ்திரேலிய நோயாளிகளை பாதிக்குமா?
29/07/2024 Duration: 07minஉலகளாவிய Saline உப்பு கரைசலின் பற்றாக்குறை ஆஸ்திரேலிய மருத்துவ சுகாதார அமைப்பை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை இது பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
-
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்குமாறு கோரிக்கை – நிராகரித்தது அரசு!
29/07/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/07/2024) செய்தி.
-
Understanding Australia’s legal system: laws, courts and accessing legal assistance - இந்த நாட்டின் சட்ட அமைப்பைப் புரிந்து கொள்வோம்: சட்டங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இலவச சட்ட உதவி
28/07/2024 Duration: 09minAre you familiar with Australia’s legal system? As a federation of six states and two territories, Australia has laws that apply nationally, as well as laws specific to each jurisdiction. Additionally, there are parallel structures of federal and state courts. Learn the basics of how the legal system works, from understanding Australian laws to accessing legal assistance. - ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு ஒழுங்கை பராமரிக்கவும், நீதியை உறுதிப்படுத்தவும் மற்றும் அதன் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான கட்டமைப்பாகும். ஒரு கூட்டாட்சியாக, ஆஸ்திரேலியா ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு பிரதேசங்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசாங்கம், சட்டமன்றம் மற்றும் நீதிமன்ற அமைப்புகளுடன் காமன்வெல்த் (கூட்டாட்சி) கட்டமைப்புகளுடன் செயல் படுகிறது. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், நம் நாட்டில் சட்ட அமைப்பு எவ்வாறு செயல் படுகிறது, மற்றும் சட்ட உதவிகளை எவ்வாறு அணுகலாம் என்று Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிப்பு
28/07/2024 Duration: 04minஇலங்கையின் 9ஆவது அதிபர் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Captivating Tamil audience: 'Kaimanam' and 'Penn' hit Sydney stage - இளைய தலைமுறையின் “கைமணம்”, முதல் தலைமுறையின் “பெண்”!
27/07/2024 Duration: 10minSydney Nadaga Priya is staging two plays, “Kaimanam” and “Pen,” on August 3 (Saturday) at 6 p.m. at the Redgum Function Centre, 14 Lane Street, Wentworthville, NSW. For more information, contact Jaishree Shankar at 0410 169 112. - சிட்னி நாடகப்பிரியா அமைப்பு “கைமணம்”, “பெண்” எனும் இரு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுகிறது. இந்நாடகங்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு NSW மாநிலத்தில் Wentworthville, 14 Lane Street, Redgum Function Centre எனுமிடத்தில் அரங்கேறுகிறது. இது குறித்த அதிக தகவலுக்கு ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களை 0410 169 112 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
26/07/2024 Duration: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 27 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?
26/07/2024 Duration: 05minAustralia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
26/07/2024 Duration: 07minஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது; தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சிட்னியில் வீடு வாங்குவது அடுத்த பத்து ஆண்டுகளுக்குக் கட்டுபடியாகாது
26/07/2024 Duration: 07minசிட்னி பெருநிலப்பரப்பில் அடுத்த பத்தாண்டுகள் வரை சராசரி வருமானம் உள்ள எவருக்கும் வீடொன்றினை வாங்குவது கட்டுப்படியாகாது என்று ஒரு ஆய்வு கணித்துள்ளது. இதன் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் Winning Loans நிறுவன இயக்குனர் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இரு அமைச்சர்கள் பதவி விலகல் - புதிய அமைச்சரவையை அறிவிக்க தயாராகும் பிரதமர்
25/07/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/07/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இந்தியாவில் உள்ள பிள்ளைகளை அழைத்து வர 12 ஆண்டுகளாக காத்திருக்கும் பெற்றோர்
25/07/2024 Duration: 01minஇந்தியாவில் விட்டுவிட்டு வந்த தங்களது மகள் மற்றும் மகனை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர 12 ஆண்டுகளாக காத்திருக்கும் தம்பதியினர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
How to resolve neighbourhood disputes? - அயலவருடனான பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி?
25/07/2024 Duration: 11minWhat are all the neighbourhood disputes and how do you resolve them? Lawyer Ganakaran explains - ஆஸ்திரேலியாவில் அயலவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
Let’s save the Tigers - புலிகளைக் காப்பாற்றுவோம்
25/07/2024 Duration: 19minHuman activities - especially poaching and deforestation have brought the tiger population to near extinction. Since 2010, International Tiger Day has been celebrated on July 29 to create awareness on the importance of Tigers to the Eco System. - மனித செயல்பாடுகளின் காரணமாக - குறிப்பாக வேட்டையாடுதல், வழிப்பாதைகளுக்காகக் காடுகளை அழித்தல் போன்றவற்றால் புலி இனம் அழியும் நிலை ஏற்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 2010ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29ஆம் நாள் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.