Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 63:46:30
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்கிறது
08/01/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/1/2024) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
-
Five tips to keep safe and cool during an Australian summer - கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
07/01/2024 Duration: 08minListening to what your body needs is important throughout the year, but it becomes even more crucial during extreme weather. Here are some essential tips to beat the Australian summer. - குளிரான மாதங்களைக் கடந்த பிறகு தெளிவான வானம் மற்றும் வெப்பமான வானிலை பலருக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கலாம். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் வெப்பம் மற்றும் வறட்சியை அதிகரிக்கும். கூடுதலாக, அதிகளவில் வெளியிடப்படும் UV- புற ஊதா கதிர்களின் அளவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட கோடை காலத்தில் ஒருவர் எவ்வாறு பாதுகாப்பாகவும் குளிர்மையாகவும் இருக்க முடியும் என்று பார்ப்போம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
06/01/2024 Duration: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 6 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
Demerit தண்டனைப் புள்ளியை நீக்கிக்கொள்ள NSW ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு
05/01/2024 Duration: 02minNSW மாநிலத்திலுள்ள ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்திலிருந்து ஒரு demerit தண்டனைப் புள்ளியை அகற்றுவதற்கான வாய்ப்பினை ஜனவரி 17 முதல் பெறவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Famous personalities who left us last year - கடந்த ஆண்டு எம்மை விட்டுப் பிரிந்த பிரபல ஆளுமைகள்
05/01/2024 Duration: 18minA compilation of some of the many Australian and Tamil personalities who departed this year. - ஆஸ்திரேலியாவிலும், எம் தமிழ் சமூகத்திலும் பெரும் ஆளுமைகளாக வலம் வந்த பலர் கடந்த ஆண்டு (2023) எம்மிடமிருந்து விடை பெற்றுள்ளார்கள். .
-
Year in Review: World 2023 - உலகம் 2023: ஒரு மீள்பார்வை
05/01/2024 Duration: 08minRenuka Thuraisingham reviews major world events and stories (excluding Australia, India and Sri Lanka), that made headlines in 2023. - இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகளில், கடந்த 2023-ஆம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய முக்கிய சம்பவங்களின் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா சமீபத்தில் வாங்கியது குறித்து அமெரிக்கா கரிசனம்
05/01/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 05/01/2024) செய்தி.
-
கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்
04/01/2024 Duration: 08minஇலங்கையின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட:டுள்ளது: நடைமுறைக்கு வந்துள்ள வரி அதிகரிப்பால் பொருட்களுக்கு விலையேற்றம் : நான்கு நாட்கள் பயணமாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க யாழ். வருகை. அவரது வருகை தொடர்பிலான எதிர்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம். இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆபத்தான, நச்சுத் தேரை மெல்பனில் கண்டுபிடிப்பு!
04/01/2024 Duration: 02minபொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும் ஒரு ஆபத்தான, நச்சுத் தேரை மெல்பன் பெருநகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
2024 Unveiled: The Year of Transformations, Surprises, and Game-Changing Moments! - இந்த ஆண்டில் நம்மைச் சுற்றி என்ன நடக்கும்?
04/01/2024 Duration: 09minThe year 2024 marks a distinct period characterized by a multitude of impending events. In anticipation of these occurrences, RaySel gathers information detailing their significance. - 2024 வித்தியாசமான ஆண்டு. இந்த ஆண்டில் பல நிகழ்வுகள் அரங்கேற காத்துள்ளன. அப்படியான நிகழ்வுகளும், அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் குறித்த தகவல் தொகுப்பு. முன்வைக்கிறார் றைசெல்.
-
Robot revolution - a year of android advances - இது ரோபோ ஆளப்போகும் காலம்!
04/01/2024 Duration: 07minAndroids boosted by Artificial Intelligence are mimicking their creators and wowing visitors at tech shows around the world. The robots have been designed for conservation, for work, and for play. The story by Deborah Groarkefor SBS News, produced by RaySel for SBS Tamil. - ரோபோக்கள் அல்லது இயந்திர மனிதர்கள் நம்மை சூழப்போகின்றன அல்லது ஆளப்போகின்றன. நமது ஆளுமையின் ஒரு பகுதியை அவை மாற்றப்போகின்றன எனும் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட விவரணத்தின் ஒலி வடிவம். ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke தமிழில் தயாரித்தவர் றைசெல்.
-
First Australians: Part 10 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 10
04/01/2024 Duration: 11minIn this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about the current state of Australian Aborigines and the call for Constitutional Recognition. - பூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பூர்வீக மக்களின் தற்போதைய நிலை குறித்தும் பூர்வீக மக்களை ஆஸ்திரேலிய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்வது குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஈரானில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிமான மக்கள் பலி
04/01/2024 Duration: 03minசெய்திகள்: 4 ஜனவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
Year in Review: Australia 2023 - ஆஸ்திரேலியா 2023: ஒரு மீள்பார்வை
03/01/2024 Duration: 12minSelvi reviews major events, news and stories that made the headlines in Australia in 2023. - கடந்து சென்ற 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.
-
Chaos as woman allegedly hit and trapped by out of control van - விபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் உதவிய சிவா சிவராஜ்
03/01/2024 Duration: 12minSiva Sivaraj (above right) ran to the chaotic crash scene at the Pyramid Video and Spice shop on Hornsey Road in Homebush West about 5pm and found a woman pinned between the van and the grocery shelves. He reveals her plea as they waited desperately for an ambulance. Pyramid Video and Spice Suntharalingam Sellathurai(Lingam) closed his shop at 1.30pm for New Year’s Day, received a call about the shocking event after 5pm. Segment by Praba Maheswaran. - புத்தாண்டு தினத்தன்று சிட்னியிலுள்ள தமிழர் செறிந்து வாழும் Homebush West பகுதியில் அமைந்துள்ள Pyramid Video & Spice கடையினுள் Van ஒன்று புகுந்து, ஓர் அதிர்ச்சியூட்டும் விபத்து ஏற்பட்டிருந்தது. இவ்விபத்துப் பற்றி அக்கடையின் உரிமையாளர் சுந்தரலிங்கம் செல்லத்துரை(லிங்கம்) அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் ஆபத்தான அந்த விபத்தில் சிக்கியிருந்த பெண்ணுக்கு உதவி, அவரின் உயிரைக் காப்பாற்றிய சிவா சிவராஜ் அவர்கள் ஆம்புலன்சுக்காகக் காத்திருந்த அவர்களின் அத் தருணங்களை எம்முடன் வெளிப்படுத்துகிறார். செய்தியின் பின்னணிக்காக நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் கைது
03/01/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
What are the major changes coming in 2024, How will it affect you? - 2024ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன, அவை உங்களை எவ்வாறு பாதிக்கும்?
03/01/2024 Duration: 11minNotable changes have been introduced this year for pivotal entities such as Centrelink, Age Pension, and Medicare. - Centrelink, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஆஸ்திரேலிய வீரர் David Warner விளையாடும் கடைசி டெஸ்ட் இன்று ஆரம்பம்
02/01/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/01/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பெர்த், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் வீட்டு விலைகள் அதிகரிப்பு
02/01/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/1/2024) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
-
Welcoming 2024: Perspectives from Five Diverse Listeners - போனது போகட்டும்... வந்திருக்கும் 2024 எப்படி அமையப் போகிறது?
01/01/2024 Duration: 23minAs the dawn of 2024 unfolds, we sought insights from five of our listeners from diverse backgrounds. In this feature, we delve into their reflections on the accomplishments and challenges faced in 2023, their aspirations for the upcoming year, and the expectations they carry into 2024. - 2024ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்து சென்ற 2023ஆம் ஆண்டில் சாதிக்க நினைத்ததெல்லாம் சாதித்தீர்களா? அல்லது சவால்களை சந்தித்தீர்களா என்றும், பிறந்திருக்கும் புத்தாண்டில், 2024ஆம் ஆண்டில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள், உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்று எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு எமது நேயர்களில் மாறுபட்ட பின்னணி கொண்ட ஐவரிடம் கேட்டிருந்தோம்.