Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 202:08:19
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • சூடான நாட்களில் மருந்துகள்: ஆபத்து வராமல் காப்பது எப்படி?

    11/02/2026 Duration: 10min

    நம் நாட்டில் கோடை காலத்தில் வெப்பமான நாட்கள் அதிகரித்து வருகின்றன. சூடான நாட்களில் மருந்துகள் விரைவில் கெட்டுப் போகலாம் என்றும் சில மருந்துகள் உங்கள் உடலின் வெப்பநிலையைப் பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. உடலில் இருந்து தண்ணீர் இழப்பு, உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க முடியாமை, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால், சில பொதுவான மருந்துகள் வெயிலில் உடலை குளிர்விக்கச் சிரமப்படுத்தி வாழ்க்கைக்குத் தடை விளைவிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சூடான நாட்களில் கடுமையான உடல்நல அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் லித்கோ நகரில் மருந்தகம் ஒன்றை நடத்தும் மருந்தாளுநர் கோபிகா ஸ்ரீகாந்தனிடமிருந்து சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களைக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • செய்திகளின் பின்னணி: நாள்தோறும் பயன்படும் மருந்துகள் PBS-இல் இல்லாதது ஏன்?

    11/02/2026 Duration: 09min

    நம் நாட்டில் மருந்துகளை மலிவாகப் பெற உதவும் முக்கிய அரசுத் திட்டம் தான் Pharmaceutical Benefits Scheme (PBS). பணம் இல்லாத காரணத்தால் மக்கள் மருந்துகளை தவிர்க்கக் கூடாது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால் சமீபத்திய செய்தி ஒன்று ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. “நாள்தோறும் பலர் பயன்படுத்தும் சில பொதுவான மருந்துகள் ஏன் PBS–இல் இல்லை?” என்பதுதான் அந்தக் கேள்வி. இது குறித்த செய்திகளின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 11 பெப்ரவரி 2026 - புதன்கிழமை

    11/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கை: அரசின் தடைகளை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம்

    10/02/2026 Duration: 08min

    கரைவலை மீன் பிடித்தலின்போது வலைகளை இழுப்பதற்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறைக்கும் அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த தடையை நீக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • அக்டோபரில் திறக்கப்படும் Western Sydney விமானநிலையத்திற்கு வரும் சர்வதேச விமானங்கள் எவை?

    10/02/2026 Duration: 03min

    சிட்னியின் புதிய சர்வதேச விமான நிலையமான மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் அக்டோபரில் பயணிகள் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி : வீடுகளில் முதலீடு செய்திருப்போரின் வரி தொடர்பான அரசின் ஆலோசனை என்ன?

    10/02/2026 Duration: 08min

    Capital gains tax மூலதன லாப வரி தள்ளுபடியில் மாற்றம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • நம்மை ஏமாற்றும் சந்தா மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இதை செய்யப்போகிறது!

    10/02/2026 Duration: 03min

    மறைமுக கட்டணங்களுக்கும் சந்தா ரத்து செய்வதில் நிலவும் சிக்கல்களுக்கும் முடிவு காணும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் அறிமுகமாகவுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 10 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை

    09/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • விக்டோரியாவில் இந்த மாதம் நிறுவப்பட்ட மொபைல் கேமரா எந்த இடங்களில் உள்ளன?

    09/02/2026 Duration: 02min

    மெல்பன் மற்றும் பிராந்திய விக்டோரியாவில் மொபைல் & சீட் பெல்ட் கண்காணிப்பு கேமராக்கள் பெப்ரவரி மாதத்தில் நிறுவப்படும் இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • RBA வட்டி வீத உயர்வு எதிரொலி: வங்கிகள் செய்வது என்ன?

    09/02/2026 Duration: 03min

    ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA அறிவித்த வட்டி வீத உயர்வுக்குப் பிறகு சேமிப்பு மற்றும் mortgage வீட்டு கடன் மீதான வட்டி விகிதங்களில் வங்கிகள் மாற்றங்களை அறிவித்துள்ளன . இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • முதுகு வலியா? அச்சம் வேண்டாம் !

    09/02/2026 Duration: 20min

    நம் நாட்டில் முதுகுவலி இப்பொழுது மிகவும் பரவலாக உள்ளது. சுமார் 4 மில்லியன் மக்களை (சுமார் ஆறு பேரில் ஒருவரை) இது பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை இயலாமைக்கு உள்ளாக்க ஒரு முக்கிய காரணமாகவும், குறிப்பிடத்தக்க பொருளாதார சுமையாகவும் இது ஆக்குகிறது. அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் மன ஆரோக்கியத்தை இது பாதிக்கிறது என்றும், வயதுக்கு ஏற்ப பாதிப்பு அதிகரித்து வருகிறது மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இது அதிகமாக உள்ளது என்றும் அண்மைய தரவுகள் கூறுகின்றன. உடலியக்க மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, Australian Physiotherapy Association என்ற ஆஸ்திரேலிய உடலியக்க மருத்துவ சங்கத்தின் உறுப்பினராக 2023ஆம் ஆண்டு இணைந்து கொண்டு, டார்வின் நகரில் பணியாற்றும் ஸ்ரீஹரன் மனோகரன் அவர்களிடம் இது குறித்து கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 09 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை

    08/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (1 – 7 பெப்ரவரி 2026)

    07/02/2026 Duration: 08min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (1 – 7 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • செய்தியின் பின்னணி : மாணவர் விசா நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீட்டில் புதிய கட்டுப்பாடு!

    06/02/2026 Duration: 07min

    Administrative Review Tribunal-இல் மேல்முறையீடு செய்யப்படும் மாணவர் விசா விண்ணப்ப விசாரணையில் சில கட்டுப்பாடுகள் அறிமுகமாகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இந்தியா – ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவுச் சீட்டு!

    06/02/2026 Duration: 01min

    மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் - பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும், ஆஸ்திரேலியா – இந்தியா முன்னணி தரவரிசை பெற்ற மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் விளையாடுகளை இலவசமாக கண்டு கழிக்க உங்ககளுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

  • BhuMeJha - பண்டைய நாகரிகங்களுக்கிடையேயான தொடர்பைத் தேடும் முயற்சி

    06/02/2026 Duration: 07min

    BhuMeJha நாட்டிய நிகழ்வு - காலத்தைத் தாண்டியும், நில எல்லைகளை மீறியும் நிலைக்கும் ஒரு பிணைப்பை பிரதிபலிக்கும் வெளிப்பாடு. பண்டைய Gondwanaland நாகரிகங்களுக்கிடையேயான தொடர்பைத் தேடும் தொடர்ச்சியான முயற்சி. எதிர்வரும் பெப்ரவரி 21 & 22 ஆம் தேதி என இரு நாட்கள் பெர்த்தில் நடைபெறும் BhuMeJha நாட்டிய நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் இந்நாட்டிய நிகழ்வை நடத்தும் சிதம்பரா அமைப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன் வெங்கடாச்சலம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • ஒரு துளி நம்பிக்கை, ஒரு முழு வாழ்க்கை

    06/02/2026 Duration: 15min

    அமெரிக்காவில் வசிக்கும் ஜெகாத்ரி தயாபரன், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த ‘குருத்தணு தானம் செய்வதற்குப் பதிவு செய்வது’ என்ற முடிவு அவரது அக்காவின் சிறு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் எடுக்கப்பட்டது. அவரது முயற்சி அந்தக் குழந்தைக்கு உதவவில்லை என்றாலும் அந்தக் கருணைச் செயல் எப்போது, யாருக்குப் பயன்படும், அதன் வரம்பு எவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதை அவர் கற்பனை செய்திருக்கவில்லை. ஜெகாத்ரி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த போது அறிந்து கொண்டது என்ன என்பதை அவரே விவரிக்க, அதன் பின்னணியை விவரணமாக்கி முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • செய்தியின் பின்னணி : தங்கத்தின் விலை ஏன் குறைய ஆரம்பித்தது?

    06/02/2026 Duration: 08min

    தமிழர்களின் பாரம்பரிய செல்வமாகக் கருதப்படும் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள் : 06 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை

    06/02/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • உங்கள் மாநிலத்தை பிற ஆஸ்திரேலிய மாநிலத்தவர் எந்த பெயரில் கிண்டலாக அழைக்கிறார்கள் தெரியுமா?

    05/02/2026 Duration: 09min

    ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றின் சுவாரசியங்களையும், அந்த பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

page 2 from 80