Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
NSW ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
27/11/2024 Duration: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு random drug test - எழுந்தமானமாக போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர்களில் 10 பேரில் ஒருவர், positive-நேர்மறை சோதனை முடிவை காண்பித்ததாக NRMAஇன் புதிய அறிக்கை கூறுகின்றது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
வெளிநாடு செல்ல திட்டமிடுகிறீர்களா? ஆஸ்திரேலிய டொலர் எங்கே வலுவாக உள்ளது
27/11/2024 Duration: 02minஆண்டின் இறுதி நெருங்கும் வேளையில் விடுமுறைக்காக வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வது பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் பயணம் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றால், வரும் வாரங்களில் நீங்கள் எந்தெந்த நாடுகளைத் தெரிவுசெய்யலாம் என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நாம் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
27/11/2024 Duration: 09minநாம் வெளியில் செல்லும்போது எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தருகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“ஆஸ்திரேலிய தமிழ் பாட புத்தகங்களில் அதிக மாற்றம் தேவை” – கலாநிதி குலம்
27/11/2024 Duration: 10minநியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் பாட நூற்களில் ஆண்டு நான்கு முதல் எட்டு வரையான தமிழ்ப் பாடநூற்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கை ஆய்வு செய்து குலசிங்கம் சண்முகம் அவர்கள் Western Sydney பல்கலைக்கழகத்திடமிருந்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூற்கள் கலாநிதி பட்டம் பெறுமளவு ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். தனது ஆய்வு குறித்தும், இந்த ஆய்வு தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கங்கள் குறித்தும் கலாநிதி குலசிங்கம் சண்முகம் அவர்கள் SBS ஒலிப்பதிவு கூடத்தில் றைசெலுடன் கலந்துரையாடுகிறார்.
-
ஆஸ்திரேலியாவில் விசா இல்லாமல் தங்கியிருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்!
27/11/2024 Duration: 07minஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உரிய விசா இல்லாமல் சட்டவிரோதமான முறையில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அதானிக்கு எதிரான அமெரிக்க பிடியாணையும், அதன் தமிழ்நாடு & இந்திய அரசியல் தாக்கமும்
26/11/2024 Duration: 09minஅமெரிக்க நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் அதானிக்கு பிடியாணை பிறப்பித்திருக்கும் விவகாரம் டெல்லி முதல் தமிழ்நாடு வரை எதிரொலிக்கிறது. அந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSW Health எச்சரிக்கை: சிட்னியின் மேற்குப் பகுதி வெப்பநிலை 39Cஐ எட்டலாம்
26/11/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய குடும்பங்களுக்கு $400 கொடுப்பனவு!
26/11/2024 Duration: 02minகுடும்பங்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய மாநில பெற்றோருக்கு 400 டொலர்கள் கொடுப்பனவு இந்தவாரம் முதல் வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அடுத்த ஆண்டு எந்த நகரங்களில் வீட்டு விலை அதிகரிக்கும்? குறையும்?
26/11/2024 Duration: 02min2025இல் சிட்னி மற்றும் மெல்பனில் வீட்டு விலைகள் மேலும் குறையும் அதே நேரத்தில் பெர்த் நகரம் வலுவான அதிகரிப்பை அனுபவிக்கும் என SQM Researchஇன் Boom and Bust அறிக்கை கூறுகின்றது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
லேபர் அரசின் வீட்டுவசதி தொடர்பிலான சட்ட முன்வடிவுகளுக்கு கிரீன்ஸ் கட்சி ஆதரவு
26/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
பாலி-9 குழுவில் எஞ்சியுள்ளோர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்?
25/11/2024 Duration: 02minஇந்தோனேசியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் பாலி 9 போதைப்பொருள் கடத்தல் குழுவைச்சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்களும் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Tamil Woman Embarks on a 40,000-Kilometer Global Voyage - உலகை சுற்றி 40,000 கிலோமீட்டர் பயணிக்கும் தமிழ்ப்பெண்
25/11/2024 Duration: 14minTwo women officers from the Indian Navy are undertaking a remarkable eight-month journey to circumnavigate the globe, covering an astounding 40,000 kilometres at sea. - எட்டு மாதங்களில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, கடலில், உலகைச் சுற்றி பயணிக்கும் முயற்சி ஒன்றில் இந்திய கடற் படையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
25/11/2024 Duration: 09minமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் JMM தலைமையிலான இந்திய அணி வெற்றி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது மற்றும் 'ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு' என மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
இது ஆஸ்திரேலியாவில் 21 லட்சம் பேரை பாதிக்கிறது. நீங்களும் அதில் ஒருவரா?
25/11/2024 Duration: 08minகொலஸ்ட்ரால் விழிப்புணர்வு வாரம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுமார் இருபத்தொரு லட்சம் பேரை பாதிக்கும் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரால் குறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஆஸ்திரேலிய மாணவி: சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்
25/11/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
நீங்கள் ஒய்வு பெறும்போது முதியோர் பராமரிப்பில் வரும் இந்த மாற்றங்கள் உங்களுக்கும் பொருந்தும்
25/11/2024 Duration: 05minமுதியோர் பராமரிப்பு துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை உருவாக்கும் புதிய சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோர் பராமரிப்பு செலவுகள், சிறப்பு சேவைகள், மற்றும் புதிய திட்டங்களின் நடைமுறைப் படுத்தல் போன்ற விடயங்களில் பெரும் மாற்றங்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
22/11/2024 Duration: 05minஇந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 23 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
வெளிநாட்டு மாணவர் குறைப்பை அரசு கைவிடும் வாய்ப்பில்லை - நிபுணர்கள்
22/11/2024 Duration: 02minஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தின் கீழ், நாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு அரசு வரம்பு ஒன்றை நிர்ணயிப்பதற்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ள போதிலும், ஏற்கனவே இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அரசு இதனை நடைமுறைப்படுத்தலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Centrelink பெயரால் இடம்பெறும் புதிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
22/11/2024 Duration: 02minஆஸ்திரேலியர்களுக்கு Centrelink நூற்றுக்கணக்கான டொலர்களை "போனஸாக” கொடுப்பதாக வெளியாகும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Has your sleep been affected since migrating to Australia? You’re not alone - புலம்பெயர்வதால் ஏற்படக்கூடிய தூக்க பிரச்சனைகளை கையாள்வது எப்படி?
22/11/2024 Duration: 09minMany people experience sleep disturbances due to stressors in their lives, including challenges associated with the migration experience. Issues such as insomnia and nightmares can affect both adults and children. Learn how to assess sleep quality, identify unhealthy sleep patterns, and determine when to seek help for yourself or a loved one. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அவர்களது தூக்கம் தொடர்பில் சில சிக்கல்கள் எழுவது பொதுவானது. ஆனால் இது குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் இது இயல்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தூக்கமின்மை ஒரு நாள்பட்ட மருத்துவப் பிரச்சினையாக மாறினால் உதவிபெறுவது அவசியமாகும்.